Friday 6 June 2014

தெரிந்துகொள்வோம் : 60ம் கல்யாணம் (சஷ்டியப்த பூர்த்தி)



தெரிந்துகொள்வோம் : 60ம் கல்யாணம் (சஷ்டியப்த பூர்த்தி)
சவுனகமகரிஷி எழுதிய சதுர்வர்க சிந்தாமணி என்னும் நூலில் அறுபதாம் கல்யாணம் நடத்துவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.
>> கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர்.
>> சஷ்டியப்த பூர்த்தி என்றால் ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பி‌க்‌கிறது எ‌ன்று பொரு‌ள், அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுப்பதாக கருதலாம்.
>> ஒரு ஆயுளை அவ‌ர் முடி‌த்து‌வி‌ட்டா‌ர் எ‌ன்று‌ம் கருதலா‌ம். அதனால்தான், அப்போது திரும்பவும் திருமணம் செய்து வை‌ப்பா‌ர்க‌ள்.
>> இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் அழைக்கிறார்கசஷ்டியப்த பூர்த்தி (60ம் கல்யாணம்) , 60வது வருடம் முடிந்து 61 ஆம் வருடம் பிறக்கும்போதுதான் செய்வாங்க (ஆங்கில காலண்டர்படி அல்ல).
>> ஏனென்றால் 60 வருடம் கழித்துதான்,அவர் பிறந்த போது நவக்கிரகங்கள் அவரது ஜாதகத்தில் எந்த இடங்களில் இருந்ததோ அதே இடத்தில் மீண்டும் வருமாம். அதனால் அப்பாவின் ஜென்ம நட்சத்திர நாளில் 60 ஆம் கல்யாணத்தை நடத்த வேண்டும்
>> ஒருவருக்கு 60 வயது முடிந்து 61 தொடங்கும் நாளில், காலயவனன், ஸுதூம்ரன் என்னும் துஷ்ட தேவதைகள் உடலில் புகுந்து இந்திரியங்களை வலுவிழக்கச் செய்கின்றனர்.
>> இதனால் உடலைப் பலப்படுத்தவும், ஆயுள், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் சஷ்டியப்த பூர்த்தி என்னும் அறுபதாம் கல்யாணம் நடத்த வேண்டும்.
>> ஆயுளை அதிகரிப்பவர்கள் மிருத்யுஞ்ஜயன், மார்க்கண்டேயர் போன்ற மனித தெய்வங்கள் ஆவர். இவர்களுக்கு பூஜை செய்து சாந்தி பரிகாரம் செய்வதே சஷ்டியப்த பூர்த்தியாகும்.
>> இவர்களின் அனுக்கிரகத்தால் ஆயுள் அதிகரிக்கும். ஒருவர் பிறக்கும்போது, வான மண்டலத்தில் நவக்கிரகங்கள் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்தனவோ, அதே ராசிகளில் மறுபடியும் தொடங்குவது 61வயது தொடங்கும் நாளில் மட்டும் தான்.
>> அதனால், இந்த விழாவை ஜென்ம (பிறந்த) நட்சத்திர நாளிலேயே நடத்த வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
>> பெ‌ற்றவ‌ர்க‌ள் த‌ங்களது ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் நடாத்தி வை‌‌ப்பது போக, ‌பி‌ள்ளைக‌ள் பெ‌ற்றவ‌ர்களு‌க்கு நடாத்தி வைப்பதுதான் 60ஆ‌ம் க‌ல்யாண‌த்‌தி‌ன் ‌மற்றுமொரு சிற‌ப்பாகு‌ம்

No comments:

Post a Comment